செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவுக்காக ஜாமீனில் விடப்பட்ட6,700 கைதிகள் சரணடைய தற்காலிக ஜெயில் தயார்

Published On 2020-10-29 19:08 GMT   |   Update On 2020-10-29 19:08 GMT
கொரோனாவுக்காக ஜாமீனில் விடப்பட்ட6,700 கைதிகள் சரணடைவதற்காக, டெல்லியில் மண்டோலி ஜெயில் அருகே தற்காலிக ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள பல்வேறு ஜெயில்களில் இருந்த கைதிகளில் சுமார் 6 ஆயிரத்து 700 பேர், கொரோனா பரவலையொட்டி, இடைக்கால ஜாமீனிலும், பரோலிலும் விடுவிக்கப்பட்டனர். கொரோனா தாக்கம் முடிவடையாததால், அவர்களுக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில், அந்த கைதிகள் நவம்பர் 2-ந் தேதி முதல் படிப்படியாக சரணடைய வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, கைதிகள் சரணடைவதற்காக, டெல்லியில் மண்டோலி ஜெயில் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் தற்காலிக ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு வீட்டுக்கு 6 கைதிகள் வீதம் மொத்தம் 2 ஆயிரம் கைதிகளை அடைக்கலாம்.

சரணடைய வரும் கைதிகளுக்கு முதலில் ஆன்டிஜென் கொரோனா விரைவு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தால், அவர்கள் தற்காலிக ஜெயிலில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, ஏற்கனவே இருந்த ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். கொரோனா இருப்பது தெரிய வந்தால், ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவார்கள்.

கைதிகள் வர இருப்பதால், கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 13-ந் தேதிக்குள், 2 ஆயிரத்து 200 கைதிகளும், 29-ந் தேதிக்கு பிறகு மீதி கைதிகளும் சரணடைவார்கள் என்று தெரிகிறது.
Tags:    

Similar News