செய்திகள்
மெகபூபா முப்தி

இந்திய அரசிலமைப்பின்படியே நாடு இயங்க வேண்டுமே தவிர பாஜகவின் திட்டப்படி அல்ல: மெகபூபா முப்தி

Published On 2020-10-23 17:37 GMT   |   Update On 2020-10-23 17:37 GMT
இந்திய அரசிலமைப்பின்படியே நாடு இயங்க வேண்டுமே தவிர பாஜகவின் திட்டப்படி அல்ல என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் ஓராண்டுக்கும் மேல் வீட்டுக் காவலில் இருந்த பின், கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்ட மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில் முதன்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ‘‘சுதந்திர, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவுடன்தான் எங்களுக்கு இணக்கம். இன்றைய இந்தியாவுடன் காஷ்மீர் மக்கள் சவுகரியமாக இல்லை. இந்திய அரசிலமைப்பின்படியே நாடு இயங்க வேண்டுமே தவிர பாஜகவின் திட்டபடி இயங்கத் தேவையில்லை.

மாநிலத்திற்கான கொடியை ஏற்ற அனுமதி கிடைத்த பின்னர்தான் தேசியக்கொடியை ஏற்றுவோம். காஷ்மீர் மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெறும்வரை தேர்தலில் போட்டியிடமாட்டேன்’’ என மெகபூபா முப்தி கூறினார்.
Tags:    

Similar News