செய்திகள்
கல்லூரி மாணவிகள் (கோப்புப்படம்)

கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் மீண்டும் கல்லூரிகள் திறப்பு

Published On 2020-10-23 16:48 GMT   |   Update On 2020-10-23 16:48 GMT
மாணவர்கள் நேரடி வகுப்புகளிலோ அல்லது ஆன்லைன் வகுப்புகளிலோ தங்கள் விருப்பப்படி படிப்பை தொடரலாம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக முதல்வரின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நவம்பர் 17 முதல் பட்டப்படிப்பு கல்லூரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது.

பொறியியல், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகள் அனைத்தும் தொடங்கப்படும் என்று கர்நாடக துணைமுதல்வர் சி.என். அஸ்வத் நாராயண் தெரிவித்தார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘மாணவர்கள் நேரடியாக வகுப்புகளிளோ அல்லது ஆன்லைன் வகுப்புகளிலோ கலந்துகொள்ளலாம். நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஆகிய இரு விருப்பங்களையும் பயன்படுத்தி கலப்புமுறை கற்றலுக்கும் செல்லலாம்’’ என்றார்.

‘‘மாணவர்கள் தங்கள் விருப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம், கல்லூரிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஷிப்ட் முறை முடிவுசெய்யப்படும்’’ என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News