செய்திகள்
மத்திய அரசு

நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Published On 2020-10-22 22:14 GMT   |   Update On 2020-10-22 22:22 GMT
நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் அவமரியாதை செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் ஜம்மு காஷ்மீர் சீன பகுதியில் இருப்பதாக காட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சிக்கு மத்திய அரசு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அஜய் சாவ்னே எழுதியுள்ள அந்த கடிதத்தில், நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் அவமரியாதை செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற செயல்பாடுகள் டுவிட்டருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் நடுநிலை தன்மை மற்றும் நேர்மை மீது கேள்வி எழுப்புவதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News