செய்திகள்
கோப்புப்படம்

ஜி.எஸ்.டி. இழப்பீடு பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.68,825 கோடி கடன் திரட்ட 20 மாநிலங்களுக்கு அனுமதி

Published On 2020-10-14 01:07 GMT   |   Update On 2020-10-14 01:07 GMT
ஜி.எஸ்.டி. இழப்பீடு பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிச்சந்தையில் ரூ.68 ஆயிரத்து 825 கோடி கடன் திரட்ட 20 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், நடப்பு நிதியாண்டில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி மூலம் ரூ.97 ஆயிரம் கோடி கடன் அல்லது வெளிச்சந்தையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் திரட்டுமாறு மாநிலங்களுக்கு 2 விருப்ப தேர்வுகளை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

வெளிச்சந்தை கடன் விருப்பத்தேர்வை 20 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. மற்ற மாநிலங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக விவாதிக்க நேற்று முன்தினம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், வெளிச்சந்தை கடன் விருப்ப தீர்வை ஏற்றுக்கொண்டுள்ள 20 மாநிலங்கள், வெளிச்சந்தையில் இருந்து ரூ.68 ஆயிரத்து 825 கோடி கடன் திரட்ட மத்திய அரசு நேற்று அனுமதி அளித்தது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின துறை இந்த அனுமதியை அளித்துள்ளது.
Tags:    

Similar News