செய்திகள்
கல்யாண்சிங்

கொரோனாவில் இருந்து மீண்டார் முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங்

Published On 2020-10-12 21:48 GMT   |   Update On 2020-10-12 21:48 GMT
கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
காசியாபாத்:

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கல்யாண் சிங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி உறுதியானது. இதனையடுத்து காசியாபாத்தில் உள்ள யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கல்யாண்சிங் உள்ளிட்ட 32 பேரை சி.பி.ஐ. கோர்ட்டு விடுவித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு கல்யாண்சிங் வரவேற்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து கல்யாண் சிங் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். அப்போது அவரது மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான ராஜ்வீர் சிங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News