செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக செயல்படும்

Published On 2020-10-11 20:38 GMT   |   Update On 2020-10-11 20:38 GMT
இன்று (திங்கட்கிழமை) முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பரவலை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 23-ந்தேதி முதல் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. எனினும் மொத்தமுள்ள 12 அமர்வுகளில் 5 அமர்வுகள் மட்டுமே இயங்கி வந்தன. 2 அல்லது 3 நீதிபதிகளை கொண்ட இந்த அமர்வுகளால் சுமார் 20 வழக்குகள் மட்டுமே தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வந்தன.

ஆனால் இன்று (திங்கட்கிழமை) முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 30 நீதிபதிகளும் 12 அமர்வுகள் மூலம் வழக்குகளை விசாரிப்பார்கள். இதில் 2 அல்லது 3 நீதிபதிகளை கொண்ட 10 அமர்வுகள், ஒற்றை நீதிபதி கொண்ட 2 அமர்வுகளும் வழக்குகளை விசாரிக்கின்றன.

அதேநேரம் இந்த அமர்வுகள் அனைத்தும் காணொலி காட்சி மூலமே வழக்குகளை விசாரிக்கும். இவ்வாறு முழு அமர்வுகளும் வழக்கு விசாரணையில் ஈடுபடுவதால் தினந்தோறும் சுமார் 40 வழக்குகள் வரை விசாரிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News