செய்திகள்
கோப்பு படம்

மகாராஷ்டிராவில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது - கல்வி மந்திரி தகவல்

Published On 2020-10-11 11:49 GMT   |   Update On 2020-10-11 11:49 GMT
கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அம்மாநில கல்வி மந்திரி தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்தியாவில் 5-ம் கட்ட கொரோனா ஊரடங்கு அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திரையரங்குகள், உணவகங்கள் போன்றவை வரும் 15-ம் தேதி முதல் செல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து அக்டோபர் 15-ம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் 19-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

அதேபோல், வேறு சில மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என அம்மாநில கல்வி மந்திரி வர்ஷா ஹையாட்டிம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த வர்ஷா,’ வகுப்புகள் ஆன்லைன் கல்வி முறையில் நடத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்படாது’ என தெரிவித்தார்.

தீபாவளிக்கு (நவம்பர் 14) பின்னர் நிலைமையை ஆராய்ந்தே மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News