செய்திகள்
ரக்ஷா பந்தன்

மருத்துவ கல்லூரிகளில் அப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வைரலாகும் தகவல்

Published On 2020-10-08 04:59 GMT   |   Update On 2020-10-08 04:59 GMT
கேரளாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.


கேரள மாநிலத்தில் அரசு உதவி பெற்று இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் ரக்ஷா பந்தன் கொண்டாட மருத்துவ கல்வி துறை இயக்குனர் ரமலா பீவி தடை விதித்து இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் தகவல்களுடன் ரமலா பீவி ஹிஜாப் அணிந்திருக்கும் புகைப்படம் இணைக்கப்பட்டு இருக்கிறது. வைரல் பதிவுகளில், உண்மையில் மத நல்லிணக்கத்தை போதிக்க நினைத்தால், முதலில் உங்களது ஹிஜாபை அகற்றுங்கள் எனும் தலைப்பு கொண்டுள்ளது.

இதே தகவல் பற்றி சில செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இதுபற்றிய பதிவுகள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

உண்மையில் ரக்ஷா பந்தன் கொண்டாட தடை விதிக்கப்பட்டதா என ஆய்வு செய்ததில், பீவி வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் கொண்டாட்டங்களுக்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



பீவி வெளியிட்ட சுற்றறிக்கையில் கேரளாவில் இயங்கி வரும் அரசு மருத்துவ கல்லூரிகளில் ரக்ஷா பந்தன் உள்பட அனைத்து வித கொண்டாட்டங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். 

அந்த வகையில் அரசு கல்லூரிகளில் ரக்ஷா பந்தன் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News