செய்திகள்
ரபேல் போர் விமானம்

இந்திய விமானப்படை தின அணிவகுப்பில் முதல் முறையாக பங்கேற்கும் ரபேல் போர் விமானம்

Published On 2020-10-03 10:47 GMT   |   Update On 2020-10-03 10:47 GMT
இந்திய விமானப்படை தின விழாவில் முதல் முறையாக ரபேல் போர் விமானங்கள் பங்கேற்க உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
புதுடெல்லி:

இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில், ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்கப்பட்ட இந்த விமானங்கள், கடந்த மாதம் 10ம் தேதி விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன. இந்த விமானங்கள் தற்போது லடாக் மற்றும் லே பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இந்நிலையில், வரும் 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதில், ரபேல் போர் விமானம் பங்கேற்க உள்ளது. முதல் முறையாக விமானப்படை அணிவகுப்பில் ரபேல் பங்கேற்க உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ரபேல் விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்ந்து செய்யும் சாசகங்களை பார்வையாளர்கள் கண்டுகளிக்க முடியும்.

ரபேல் விமானம் 4.5 தலைமுறை வகையைச் சேர்ந்த போர் விமானம். இரட்டை-எஞ்சின் கொண்ட சக்திவாய்ந்த இந்த விமானத்தில் இடைமறிப்பு, வான்வழி உளவு, தரை ஆதரவு, துல்லிய தாக்குதல், எதிரிகளின் இலக்குகளை கண்டறியும் வகையிலான ரேடார் கருவிகள், ஜாமர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளன.
Tags:    

Similar News