search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் போர் விமானம்"

    • ரபேல் போர் விமானம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
    • வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல் போன்ற நவீன அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.

    புதுடெல்லி:

    பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தன. விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவை முறைப்படி இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன.

    அதன்பின்னர் ஒவ்வொரு தொகுப்பாக விமானங்கள் அனுப்பப்பட்டன. இதுவரை 35 விமானங்கள் வந்து சேர்ந்த நிலையில், இறுதிக்கட்டமாக 36வது ரபேல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.

    அனைத்து ரபேல் விமானங்களும் வந்து சேர்ந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் "பேக் இஸ் கம்ப்ளீட்" என குறிப்பிட்டுள்ளது.

    இந்த ரபேல் போர் விமானம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.

    ராபேல் முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நாளுக்கு நாள் வார்த்தைப்போர் அதிகரித்து வரும் நிலையில் ராகுல் காந்தி பாகிஸ்தானுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளரா ? அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். #RafaleDeal #Modi #AmitShah #RahulGandhi
    புதுடெல்லி :

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார்.

    இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூறத்தக்கது.

    ஹாலன்டேவின் இந்த கருத்து இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டார், காவலாளி மோடி ஒரு திருடர் என ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    இந்நிலையில், இதற்கு எதிர்வினையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ராகுல் காந்தி பாகிஸ்தானுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளார் என விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :-

    பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறி வருகிறார். பாகிஸ்தான் அரசும் இதையே தான் கூறி வருகிறது. எனவே, மோடிக்கு எதிரான ராகுல் காந்தியின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. இதனால் மோடிக்கு எதிராக சர்வதேச அளவில் பாகிஸ்தானுடன் ராகுல் காந்தி மெகா கூட்டணி அமைத்துள்ளரா ? என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே நாளுக்கு நாள் வார்த்தைப்போர் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #RafaleDeal #Modi #AmitShah #RahulGandhi
    ரபேல் போர் விமானம் தொடர்பாக முறைகேடுகளுக்கு பிரதமர் மோடி தார்மீக பொறுப்பேற்று பதவியில் இருந்து விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. #RafaleDeal #PMModi
    புதுடெல்லி :

    ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைத்ததில் மத்திய அரசின் பங்கை பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே விளக்கி உள்ளார். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள இடதுசாரி கட்சிகள், மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளன.

    இந்த முறைகேட்டுக்கு பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தை ரபேல் ஒப்பந்தத்தில் இணைக்க வற்புறுத்தியதன் மூலம் இந்த முறைகேட்டில் பிரதமருக்கு நேரடியாக பங்கு இருப்பதாக கூறியுள்ள அந்த கட்சி, இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

    அதேநேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியோ, ரபேல் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவை தாமதமின்றி அமைத்து விசாரணை நடத்துவதுடன், இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய அரசின் பங்கு குறித்த உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    ரபேல் ஒப்பந்தம் ஒரு முதல் தர ஊழலாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ள அந்த கட்சி, இதில் உள்ள உண்மைகளை மோடி அரசு வேண்டுமென்றே மறைக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. #RafaleDeal #PMModi

    ரபேல் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, யாரோ எழுதி கொடுத்ததை படித்துவிட்டு குற்றம்சாட்டுவதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். #YogiAdityanath #RafaleDeal #RahulGandhi


    லக்னோ :

    ரபேல் ஒப்பந்தம் பற்றி பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ள தகவலில், உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக எங்களுக்கு வேறு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது என கூறினார்.

    இதற்கு பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்றும் அவர் ஒரு திருடன் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    இந்நிலையில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் இன்று குறிப்பிட்டுள்ளதாவது :-

    ராகுல் காந்தி ஓர் உதவியற்றவர், உண்மைகளை பற்றி அறியாத அவர் யாரோ எழுதி கொடுப்பவற்றை படித்துவிட்டு மத்திய அரசின் மீது குற்றம்சாட்டுகிறார். இந்திய சுதந்திரத்திற்கு பின் 70 வருடங்களுக்கும் மேல் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி குடும்பத்தினரின் தொடர்ச்சியான ஆட்சியின் கீழ் ஏழைகள் இன்னும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு உரிய வகையில் சென்றடையவில்லை. இந்த திட்டங்கள் பற்றி ஏழைகள் தெரிந்து இருந்தால் அவர்கள் வறுமை நிலைக்கு சென்றிருக்கமாட்டார்கள்.

    எனவே, இந்திய மக்களிடம் காங்கிரஸ் மற்றும் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும். யார் திருடன் என்று ஒவ்வொருவருக்கும் தெரியும் என கூறினார்.

    அவர்கள் (காங்கிரஸ் கட்சி) நாட்டை சாதி மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றால் பிரித்து தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் வகுப்புவாதம் ஆகியவற்றின் முன்பாக சரணடைந்து விட்டனர். ஆனால், பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு முன்னேற்றத்தினை நோக்கி பயணிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #YogiAdityanath #RafaleDeal #RahulGandhi
    ×