என் மலர்

  செய்திகள்

  ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
  X

  ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019
  புதுடெல்லி:

  விமானப் படைக்கு, ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சீராய்வு மனுக்களுடன், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பத்திரிகைகளில் வந்த சில செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

  இந்த கூடுதல் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன், ரபேல் சீராய்வு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்வதற்கு 4 வாரம் அவகாசம் வழங்கும்படி மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதிகள், மே 6-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் மே 6-ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  ரபேல் விசாரணை நடைபெற இருக்கும் மே 6-ம் தேதி ஐந்தாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019
  Next Story
  ×