என் மலர்

  செய்திகள்

  ரபேல் ஒப்பந்தம் குறித்து பொறுமையுடன் பேசுங்கள்: பாஜகவுக்கு சிவசேனா அறிவுரை
  X

  ரபேல் ஒப்பந்தம் குறித்து பொறுமையுடன் பேசுங்கள்: பாஜகவுக்கு சிவசேனா அறிவுரை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தம் குறித்து பொறுமையுடன் பேசுங்கள் என பா.ஜனதாவுக்கு, சிவசேனா அறிவுரை கூறியுள்ளது. #RafaleDeal #BJP #ShivSena
  மும்பை :

  சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

  ஜல்காவ் பகுதியில் மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் மோதிக்கொண்ட அதிர்ச்சிகரமான வீடியோவை மக்கள் நாடு முழுவதும் கண்டுள்ளனர். தங்கள் கட்சியில் இணைந்தால் குண்டர்கள் கூட வால்மீகியாக மாறிவிடுவார்கள் என பா.ஜனதா கூறியது. ஆனால் இந்த வன்முறை சம்பவம் மூலம் வால்மீகிகள் குண்டர்களாக மாறிய தருணத்தை அனைவரும் உணர்ந்தனர்.

  இது பா.ஜனதா- சிவசேனா கூட்டணிக்கு ஏற்பட்ட கறை மட்டும் அல்ல. பா.ஜனதா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தருணம் ஆகும். பா.ஜனதா தன்னைத்தானே மாறுப்பட்ட கருத்துடைய கட்சியாக கூறிக்கொள்கிறது. இந்த வன்முறையையும் வேறுபட்ட கருத்துகளை பிரதிபலிக்கும் நிகழ்வு என கூறி நியாயப்படுத்த முடியாது.  ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பதிலளிக்கும்போது குறைந்தபட்சம் பொறுமையுடன் பதில் அளியுங்கள். பா.ஜனதாவில் ராணுவ மந்திரியில் இருந்து அனைத்து தலைவர்களும் வாய்க்கு வந்தபடி இந்த பிரச்சினை குறித்து பேசுகிறார்கள்.

  இது கட்சியில் பிரச்சினையை அதிகரிக்க செய்யும். எனவே முடிந்தவரை இதுகுறித்து பேசுவதை குறைத்துகொள்வது நல்லது என்பது எங்களுடைய அறிவுரையாகும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

  நமோ டி.வி.க்கும் தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்காதது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், “ஒன்று அல்லது இரண்டு சேனல்களை தவிர மற்ற அனைத்து சேனல்களும் “நமோ டி.வி.”யாக தான் உள்ளது. அவற்றில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே “நமோ டி.வி.”க்கு தடை விதிப்பதை தவிர்க்க முடியாது” என்று கூறப்பட்டு உள்ளது. #RafaleDeal #BJP #ShivSena
  Next Story
  ×