செய்திகள்
சஞ்சய் ராவத்

ராகுல் காந்தி மீதான போலீஸ் தாக்குதலுக்கு யாரும் ஆதரவு தரமாட்டார்கள்: சஞ்சய் ராவத்

Published On 2020-10-03 02:47 GMT   |   Update On 2020-10-03 02:47 GMT
உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி மீதான போலீஸ் தாக்குதலுக்கு யாரும் ஆதரவு தர மாட்டார்கள் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை :

உத்தரபிரதேசத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில போலீசாரால் தாக்கப்பட்டார்.

மேலும் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

எங்களுக்கு காங்கிரஸ் கட்சியுடன் வேறுபாடுகள் இருக்கலாம். 144 தடை உத்தரவை காரணம் காட்டி ராகுல் காந்தி ஹாத்ராசுக்கு செல்லாமல் தடுத்து இருக்கலாம். ஆனால் போலீசார் அவரின் சட்டை காலரை பிடித்து, தரையில் தள்ளிய சம்பவம் மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

இது ஜனநாயக கூட்டு பலாத்காரம். அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்படி எதிர்கட்சி தலைவரை நடத்தினால், யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா? எப்போதும் போல அரசியல் ரீதியாக அவரை நீங்கள் ஏளனம் செய்ய முடியும். ஆனால் போலீசார் அவரை தாக்கிய சம்பவத்திற்கு யாரும் ஆதரவு தர போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News