2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் சம்மதம்: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை
பதிவு: செப்டம்பர் 29, 2020 16:29
2ஜி வழக்கு
இந்தியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் 2ஜி முறைகேடு வழக்கும் ஒன்று. 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அருவரையும் சிபிஐ கைது செய்து ஜெயிலில் அடைத்தது. பினனர் இருவரம் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கு சிபிஐ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீ்ர்ப்பில் ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் குற்றவாளிகள் அல்ல என கோர்ட் விடுதலை செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது வருகிற 5-ந்தேதி முதல் தினமும் 2ஜி வழக்கு விசாரிக்கப்படும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :