செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா பாதிப்பால் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம் : பிரதமர் மோடி இரங்கல்

Published On 2020-09-23 17:34 GMT   |   Update On 2020-09-23 17:34 GMT
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
 
மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி கடந்த 11ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடிக்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4-வது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி ஆவார்.

கர்நாடகாவின் பெலகாவி தொகுதியில் இருந்து 4 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ரெயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில் கூறுகையில், "சுரேஷ் அங்காடி ஒரு அர்ப்பணிப்புமிக்க பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் திறமையான அமைச்சராக இருந்தார். அவர் கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைத்தார். திறமையான அமைச்சராக இருந்த அவரின் மறைவு வருத்தமளிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News