செய்திகள்
மக்களவை

நாடாளுமன்ற மக்களவை கூட்டத் தொடர் நாளையுடன் முடிவடைகிறது

Published On 2020-09-22 14:25 GMT   |   Update On 2020-09-22 14:25 GMT
வேளாண் மசோதாக்கள் உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாளையுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் மக்களவை முடிவடைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா வைரஸ் தொற்றால் குறிப்பிட்ட நேரத்தில் நடத்த முடியாமல காலம் தள்ளிப்போனது. இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 14-ந்தேதி கூடியது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியது. மேலும், எம்.பி.க்களுக்கான சம்பள குறைப்பு மசோதாக்களை தாக்கல் செய்தது.

மாநிலங்களவை வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான சஸ்பெண்ட்-ஐ திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும், அவைகளை புறக்கணிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளைய கூட்டம் முடிந்த பின்னர், தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News