செய்திகள்
திருமண மோசடி

பெங்களூருவில் திருமண ஆசைகாட்டி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.7½ லட்சம் மோசடி

Published On 2020-09-22 02:16 GMT   |   Update On 2020-09-22 02:16 GMT
பெங்களூருவில் திருமண ஆசைகாட்டி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
பெங்களூரு :

பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே வினாயகா லே-அவுட்டில் 30 வயது வாலிபர் வசிக்கிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இணையதளம் மூலமாக பெண் தேடினார். அப்போது அவருக்கு மேய்பெல் எட்வர்டு என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் தங்களது செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டு பேசத் தொடங்கினார்கள். அப்போது கம்ப்யூட்டர் என்ஜினீயரை திருமணம் செய்ய விரும்புவதாக மேய்பெல் தெரிவித்துள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தான் புதிதாக வீடு வாங்க இருப்பதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் மேய்பெல் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.7½ லட்சத்தை கம்ப்யூட்டர் என்ஜினீயர் அனுப்பி வைத்திருக்கிறார். அதன்பிறகு, மேய்பெல் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதால், அவரை தொடர்பு கொள்ள கம்ப்யூட்டர் என்ஜினீயரால் முடியவில்லை. மேலும் திருமணம் செய்வதாக கூறி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக மேய்பெல் மீது சைபர் கிரைம் போலீசில் வாலிபர் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேய்பெல்லை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News