செய்திகள்
கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்

Published On 2020-09-21 03:14 GMT   |   Update On 2020-09-21 03:14 GMT
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை விரைவாக கண்டறிவதற்காக பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி 10 லட்சம் என்ற அளவில் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனால் நொய்த்தொற்று எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதேசமயம், குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 54,00,620 ஆக இருந்தது. 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்திருந்தனர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையானது, உலக அளவில் குணமடைந்தவர்களிள் எண்ணிக்கையில் 19 சதவீதம் ஆகும். 

குணமடைந்தவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டாவது இடத்தில்  உள்ளது. அமெரிக்காவில் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 42.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News