செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

பதவி உயர்வு விவகாரம்- 8 தமிழக நீதிபதிகளின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Published On 2020-09-04 08:03 GMT   |   Update On 2020-09-04 08:03 GMT
பதவி உயர்வுக்கு பரிந்துரைக்காததை எதிர்த்து தமிழக நீதிபதிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக தங்களுடைய பெயர்கள் பரிந்துரை செய்யப்படாததை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த 8 நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்யும் சென்னை உயர்நீதிமன்ற கொலீஜியம், தங்களின் பெயர்களை புறக்கணித்ததாகவும், அதற்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்துவதற்கு அவர்களின் ஜூனியர்களை பரிந்துரைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு தங்களை பரிசீலிக்காத உயர்நீதிமன்ற கொலீஜியத்தின் முடிவு அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகளுக்கு எதிரானது எனவும் வழக்கு விசாரணையின்போது வாதிடப்பட்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இறுதியாக கடந்த மாதம் 31ம் தேதி இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 8 நீதிபதிகளின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு தொடர்ந்த நீதிபதிகள் தங்கள் மனுவில் கூறியிருக்கும் அம்சங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News