செய்திகள்
மீட்பு பணி

மத்திய பிரதேசத்தில் கனமழை- விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி

Published On 2020-08-30 07:02 GMT   |   Update On 2020-08-30 07:02 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். 

சேகூர் மாவட்டம் சோமல் வாடா பகுதியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் உள்ள மக்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.


மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். 

இந்நிலையில், பிரதமர் மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வெள்ள பாதிப்பு குறித்து விளக்கினார். மேலும், மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இன்றும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News