செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

வங்கிக்கடன்களை திருப்பி செலுத்துவது தொடர்பான வழக்கு- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Published On 2020-08-26 06:38 GMT   |   Update On 2020-08-26 06:38 GMT
வங்கிக்கடன்களை திருப்பி செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

வங்கிக்கடன்களை திருப்பிச் செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

வங்கிக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளீர்கள். நீங்கள் அறிவித்த பொதுமுடக்க உத்தரவால்தான் இந்த பிரச்சனையே ஏற்பட்டது.

வட்டிக்கு வட்டி வசூல் ரிசர்வ் வங்கியின் முடிவு என கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்கிறது. உங்களது பணியை செய்யும் நேரம் இதுவல்ல; தேவையான நிவாரணத்தை வழங்குவதும் அவசியம்.

வங்கிக் கடன் வழக்கில் ஒருவாரத்தில் தெளிவான விளக்கத்தை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News