செய்திகள்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இன்று இணைந்தார்

Published On 2020-08-25 09:55 GMT   |   Update On 2020-08-25 09:55 GMT
தமிழக பாஜக தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இன்று இணைந்துள்ளார்.
புதுடெல்லி:

தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் என்ற அந்தஸ்தில் பணியாற்றியபோது, தனது கடும் நடவடிக்கைகளால் அங்கு பெயர் பெற்றார்.

பெங்களூர் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராகவும், அண்ணாமலை பணியாற்றினார். இந்த நிலையில்தான். கடந்த ஆண்டு மே மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து அண்ணாமலை தனது சொந்த மாநிலமான தமிழகத்தில் அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் டெல்லியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன். பதவியை எதிர்பார்த்து பாரதிய ஜனதாவில் சேரவில்லை; சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News