செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தூத்துக்குடி காவலர் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

Published On 2020-08-24 11:43 GMT   |   Update On 2020-08-24 11:43 GMT
ரவுடியை பிடிக்கச்சென்றபோது தூத்துக்குடி காவலர் மரணம் அடைந்தது குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை:

தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை பிடிக்கச்சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது என்று  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா என்றும் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News