செய்திகள்
ஜே.பி.நட்டா

பி.எம்.கேர்ஸ் பற்றிய உத்தரவு ராகுல் காந்திக்கு கிடைத்த பலத்த அடி - ஜே.பி.நட்டா

Published On 2020-08-19 00:29 GMT   |   Update On 2020-08-19 00:29 GMT
பி.எம்.கேர்ஸ் பற்றிய உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த பலத்த அடி என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
புதுடெல்லி:

பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

ராகுல் காந்தி குடும்பம் பல பத்தாண்டுகளாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியை தங்கள் குடும்ப சொத்தாகவே கருதியது. அதில் உள்ள நிதியை அப்பட்டமாக தங்கள் குடும்ப அறக்கட்டளைகளுக்கு மாற்றியது.

அதே எண்ணத்தில், பி.எம்.கேர்ஸ் பற்றி ராகுல் காந்தியும், அவருடைய அடிப்பொடிகளும் அவதூறு பிரச்சாரம் செய்தனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, அவர்களது அவதூறு பிரச்சாரத்துக்கு பலத்த அடி கொடுத்துள்ளது.

அவர்களது தீய உள்நோக்கம் மற்றும் தீய முயற்சிகளையும் மீறி உண்மை ஒளிர்வதை அந்த உத்தரவு காட்டுகிறது. இதற்கு பிறகாவது ராகுல் காந்தி கோஷ்டி தங்கள் வழிமுறையை மாற்றிக் கொள்வார்களா? அல்லது மீண்டும் தர்மசங்கடத்துக்கு ஆளாவார்களா? என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News