செய்திகள்
ப சிதம்பரம்

ராஜ்நாத் சிங் வாக்குறுதி பெரிய முழக்கமாக இருந்தது: முடிவில் ஓசையின்றி போனது- ப.சிதம்பரம் கருத்து

Published On 2020-08-09 09:10 GMT   |   Update On 2020-08-09 09:10 GMT
மிகப்பெரிய அறிவிப்பை ராஜ்நாத் சிங் சொல்ல இருக்கிறார் என்ற நிலையில், முடிவில் ஒன்றுமில்லாமல் போனது என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று காலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கியமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

ராஜ்நாத் நாத் சிங் எது குறித்து அறிவிக்கப்போகிறார் என்று எல்லோரும் ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர்.

ராஜ்நாத் நாத் பாதுகாப்புதுறைக்கான 101 இறக்குமதி பொருட்கள் மீது தடைவிதிக்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவைகள் இந்தியாவில உற்பத்தி செய்யப்படும் என்றார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யும் ஆன ப.சிதம்பரம் கூறுகையில் ‘‘மிகப்பெரிய சத்தமாக தெரிவிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சரின் வாக்குறுதி, இறுதியில் சிறய சத்தத்துடன் முடிவடைந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் மட்டுமே பாதுகாப்பு தடவாளங்களை இறக்குமதி செய்யப்படும். எந்தவொரு தடையும் உண்மையிலேயே அவர்கள் மீதான தடைதான். பாதுகாப்பு அமைச்சர் சொன்ன ஞாயிற்றுக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு, அவரது அமைச்சகத்திற்கு அவர் பிறப்பிக்கும் உத்தரவுக்கு சமமானது.

இறக்குமதி தடை என்பது அதிக ஒலி எழுப்பும் வாசகமாக உள்ளது. இதன்பொருள் இன்றும் இரண்டு முதல் நான்கு வருடத்தில் நான் அவற்றை உற்பத்தி செய்ய முயற்சிப்போம். அதன்பின் தடை செய்வோம் என்பதுதான்’’ என்றார்.
Tags:    

Similar News