செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

முதியோருக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-08-04 23:44 GMT   |   Update On 2020-08-04 23:44 GMT
தகுதி வாய்ந்த முதியவர்களுக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் கிடைப்பதற்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் அஸ்வனி குமார் தாக்கல் செய்த மனுவில், ‘தகுதி வாய்ந்த முதியவர்களுக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் கிடைப்பதற்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்’ என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுடன் முதியோருக்கு பாகுபாடின்றி சிகிச்சைகள் அளிக்க வழிவகை கோரும் மற்றொரு மனுவும் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான காணொலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.மோகனா இடைமறித்து, ‘இது தொடர்பாக மாநிலங்கள் ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன’ என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘தொற்று நோயில் இருந்து முதியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்து கோரிக்கை வரும்போதெல்லாம் அதன்பேரில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான நேரத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News