செய்திகள்
மெகபூபா முப்தி

முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு

Published On 2020-08-01 10:16 GMT   |   Update On 2020-08-01 10:16 GMT
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி பிரிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அந்த மாநில முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதில் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முக்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் 

வைக்கப்பட்டனர்.
 
இதற்கிடையே, காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள கிளை சிறையில் காவலில் வைக்கப்பட்டு இருந்த மெகபூபா முப்தி, பேர்வியூ குப்கர் சாலையில் 

இருக்கும் அவருடைய அலுவலக இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் . 

இந்நிலையில், மெகபூபா முப்தியின் வீட்டுக் காவல் ஆகஸ்டு 5ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்த பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டது 
குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News