செய்திகள்
ராகுல் காந்தியுடன் சோமன் மித்ரா

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா மறைவு

Published On 2020-07-30 06:25 GMT   |   Update On 2020-07-30 06:52 GMT
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார்.
கொல்கத்தா:

மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சோமன் மித்ரா (வயது 78). முன்னாள் எம்பியான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் சிறுநீரக கோளாறு மற்றும் இதய பாதிப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு பின்னர் சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டமான 1960-களில் மாணவர் அணி தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய மித்ரா, பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். 1982-2006 காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஆறு முறை சீல்டா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News