செய்திகள்
புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்பு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

Published On 2020-07-29 12:12 GMT   |   Update On 2020-07-29 12:12 GMT
புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “புகைப்பழக்கம் உள்ளவர்களின், கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக  உள்ளது.  புகைப்பிடிக்கும்போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும்.

அது மட்டுமல்லாமல், புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, கொரோனா தொற்றுக்கு எதிராக போரிடும் சக்தியை இழந்துவிடும்.

இதுபோலவே இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கும், கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகமாக  உள்ளது. புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்கள், பொது இடங்களில் எச்சில்  துப்பும்போது அவை மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News