செய்திகள்
கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு உயர்வு - கவர்னர் கவலை

Published On 2020-07-27 08:46 GMT   |   Update On 2020-07-27 08:46 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா கவலை தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா கவலை தெரிவித்துள்ளார். கடந்த 1-ந் தேதியில் இருந்து, பாதிப்பு எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்து விட்டதாக அவர் கூறினார்.

மேலும், கொரோனா பரவலை கட்டப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சட்டசபையை கூட்டுவது தொடர்பாக, மாநில காங்கிரஸ் அரசுடன் மோதல் எழுந்துள்ள சூழ்நிலையில், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கவர்னர் மாளிகையை இன்று முற்றுகையிட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதனால், கவர்னர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை செயலாளர் ராஜீவ் ஸ்வருப், டி.ஜி.பி. புபேந்திர யாதவ் ஆகியோர் நேற்று கவர்னரை சந்தித்து எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News