செய்திகள்
ஆற்றில் சிக்கிய பெண்களை மீட்கும் போலீசார்

ஆற்றின் நடுவில் சென்று செல்பி எடுத்தபோது ஆபத்தில் சிக்கிய இளம்பெண்கள்

Published On 2020-07-25 10:21 GMT   |   Update On 2020-07-25 10:21 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆற்றின் நடுவே சென்று செல்பி எடுக்க முயன்றபோது கரையேற முடியாமல் சிக்கிய பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
போபால்:

இணையத்தில் பிரபலம் ஆவதற்கும், சமூக வலைத்தளங்களில் லைக்குகளை பெறுவதற்காகவும் பல்வேறு இளைஞர்கள் ஆபத்தான முறையில் செல்பி எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் சில சமயங்களில் உயிரையும் இழந்துவிடுகின்றனர்.

அவ்வகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 இளம்பெண்கள், ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றபோது ஆபத்தில் சிக்கிக்கொண்டனர். 

சிந்த்வாரா மாவட்டம் ஜுனார்டியோ பகுதியைச் சேர்ந்த 6 இளம்பெண்கள், பெஞ்ச் ஆற்றங்கரைக்கு பிக்னிக் சென்றனர். அப்போது, 2 இளம் பெண்கள் மட்டும், ஆற்றின் மையப்பகுதிக்கு சென்று பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்தனர். அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளம் அதிகரித்தது. இதனால் இருவரும் கரையேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். 

கரையில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் இளம்பெண்களை பத்திரமாக மீட்டனர். 

போலீசார் தங்கள் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் ஆற்றில் இறங்கி இளம்பெண்களை மீட்கும்போது எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News