செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கேரளாவில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Published On 2020-07-16 13:10 GMT   |   Update On 2020-07-16 13:10 GMT
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,275 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட தகவலின் படி, மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 722 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை 10,275  பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News