செய்திகள்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா

அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி... வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட எடியூரப்பா

Published On 2020-07-10 10:27 GMT   |   Update On 2020-07-10 10:35 GMT
கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
பெங்களூரு:

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் முதல்வரின் வீடு மற்றும் அலுவலகத்தில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் எடியூரப்பா இன்று முதல் சில நாட்களுக்கு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், வீட்டில் இருந்தே அலுவலக பணிகளை காணொலி வாயிலாக கவனிக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். 

பொதுமக்கள் பாதுகாப்பாக தனிமனித இடைவெளியை பின்பற்றி, மாஸ்க் அணிந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கர்நாடகாவில் 31105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12833 பேர் குணமடைந்துள்ளனர். 486 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News