செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள்

Published On 2020-07-06 09:19 GMT   |   Update On 2020-07-06 09:19 GMT
கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக புதிய அறிகுறிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி:

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,55,414 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65,34,456ஆக உயர்ந்து உள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,36,720ஆக உயர்ந்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 29,82,928 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,32,569ஆக உயர்ந்து உள்ளது.

ரஷ்யாவில் 6 லட்சத்து 81 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் ஆகியவை இருந்தாலே கொரோனா வைரஸ் பரிசோதனை அவசியம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய ஆறு அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைவலி,வாந்தி, வயிற்றுப் போக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு கொரோனா அறிகுறிகள் குறித்த எச்சரிக்கைகளை அவ்வபோது அறிவித்து வருகிறது.

கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன
Tags:    

Similar News