செய்திகள்
போராட்டம் நடத்தியவர்களை கைது செய்யும் காவல்துறை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2020-06-29 05:37 GMT   |   Update On 2020-06-29 05:37 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அரசு விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. தற்போது கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்தபோதும், உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியதால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும், விலை உயர்வை திரும்பப்பெற உத்தரவிடக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



டெல்லியில் மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தனது வீட்டில் இருந்து ஆதரவாளர்களுடன் சைக்கிளில் சென்று மின்ஸ்க் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

டெல்லியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News