செய்திகள்
அமித்ஷா-கெஜ்ரிவால் ஆய்வு

1,000 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம்: அமித்ஷா - கெஜ்ரிவால் நேரில் ஆய்வு

Published On 2020-06-27 13:59 GMT   |   Update On 2020-06-27 13:59 GMT
டெல்லியில் 1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து நேரில் ஆய்வு செய்தனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

டெல்லியில் வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

குறிப்பாக டெல்லியில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலையீட்டுக்கு பின் அதிகரிக்கப்பட்டது. 

பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதன் விழைவாக அங்கு கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையடுத்து, கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஷதார்பூரின் ராதா ஷோனாமி பியஸ் பகுதியில் 1,000 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
   
இந்நிலையில், அந்த கொரோனா சிகிச்சை மையத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் இணைந்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது சிகிச்சை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டனர்.



Tags:    

Similar News