செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

கொரோனா பரிசோதனையை அதிகரிக்காவிட்டால் ஆபத்து: தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை

Published On 2020-06-25 03:55 GMT   |   Update On 2020-06-25 03:55 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் ஆபத்து தான் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.
புனே :

மகாராஷ்டிராவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புனே மற்றும் பிம்பிரிசிஞ்ச்வாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புனேயில் கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளது. கொரோனா பரிசோதனைகளை புறக்கணிப்பது புனே நகரத்துக்கு ஆபத்தானது. மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 38 ஆயிரம் பரிசோதனைகள் செய்ய வேண்டும். ஆனால் 14 ஆயிரம் பரிசோதனைகள் தான் செய்யப்படுகிறது. மும்பையில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஆனால் 4 ஆயிரம் பரிசோதனைகள் தான் செய்யப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது என நான் நினைக்கிறேன்.

புனேயில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 12 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களில் இது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாம் சோதனைகளை அதிகப்படுத்தினால், கூடுதலான நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தலாம். நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியும். கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளையும் குறைக்க முடியும்.

மந்திரிகள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. மந்திரிகளுக்கும், நிர்வாகத்திற்கு இடையிலும் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. அவர்களை ஒருங்கிணைப்பது முதல்-மந்திரியின் பொறுப்பாகும். ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் பின்னோக்கி செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News