செய்திகள்
சோனியா காந்தி

சீனா ஆக்கிரமித்தது பற்றி நாட்டு மக்களுக்கு மோடி தெரிவிக்கவேண்டும்: சோனியா காந்தி கோரிக்கை

Published On 2020-06-18 02:56 GMT   |   Update On 2020-06-18 02:56 GMT
சீன ராணுவம் எப்படி ஊடுருவி இந்திய பகுதியை ஆக்கிரமித்தது என்பது பற்றியும், நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி :

லடாக் மோதல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இந்திய மக்களிடையே கோபம் ஏற்பட்டு உள்ளது. சீன ராணுவம் எப்படி ஊடுருவி இந்திய பகுதியை ஆக்கிரமித்தது என்பது பற்றியும், நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்“ என்று கூறி உள்ளார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்துக்கும், அதன் வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும், அரசுக்கும் ஆதரவாக இருப்பதாகவும், எதிரியின் சவால்களை சந்திக்க ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கும் என நம்புவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Tags:    

Similar News