செய்திகள்
ஐசிஎம்ஆர் அலுவலகம்

நவம்பரில் கொரோனா உச்ச நிலை அடையுமா? ஆய்வு தகவலுக்கு ஐசிஎம்ஆர் மறுப்பு

Published On 2020-06-15 07:46 GMT   |   Update On 2020-06-15 07:46 GMT
இந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் உச்ச நிலையை அடையும் என வெளியிடப்பட்ட ஆய்வை தாங்கள் நடத்தவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவிக் கொண்டிருக்கிறது. பெருகி வரும் நோயாளிகளை கவனித்து சிகிச்சை அளிப்பதற்கு அரசுகள் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக்கொண்டே போகின்றன.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐ.சி.எம்.ஆர்.) அமைக்கப்பட்ட செயல்பாட்டு ஆராய்ச்சி குழு ஒரு ஆய்வு நடத்தியதாகவும், இந்தியாவில் நவம்பர் மாதம் மத்தியில் தான் கொரோனா வைரஸ் உச்சம் அடையும் என்று அதில் தெரியவந்திருப்பதாகவும் செய்தி வெளியானது. பல்வேறு ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களிலும் இது வெளியானது. இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த தகவலை ஐசிஎம்ஆர் மறுத்துள்ளது. இந்த ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் காரணம் என்ற செய்தி தவறானது என்றும், அப்படிப்பட்ட ஆய்வை ஐ.சி.எம்.ஆர் மேற்கொள்ளவில்லை, அது ஐ.சி.எம்.ஆரின் அதிகாரப்பூர்வ அறிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News