செய்திகள்
மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் (கோப்பு படம்)

விமான போக்குவரத்து துறைக்கு இது மோசமான ஆண்டு- 84.3 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும்

Published On 2020-06-10 07:12 GMT   |   Update On 2020-06-10 07:12 GMT
கொரோனா வைரஸ் காரணமாக தொழில் முடங்கியதால், இந்த ஆண்டில் விமான நிறுவனங்களுக்கு 84.3 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிதி ரீதியாக, இந்த ஆண்டு விமான நிறுவனங்களுக்கு  மிக மோசமான ஆண்டாக அமைய உள்ளது.

தற்போது பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விமான போக்குவரத்தை தொடங்கி உள்ளன. எனினும், வழக்கமான சேவைகள் இல்லாததாலும், பயணிகள் எண்ணிக்கை குறைந்ததாலும் விமான நிறுவனங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இல்லை.

விமான போக்குவரத்து துறையின் நிதி நிலை தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக, உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்களுக்கு 2020 ஆம் ஆண்டில் 84.3 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விமான போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான ஆண்டாகும். விமான நிறுவனங்களின் வருவாய் கடந்த ஆண்டு 838 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்து, 419 பில்லியன் டாலராக இருக்கும்.

2021ஆம் ஆண்டில், இழப்புகள் 15.8 பில்லியன் டாலராகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் படிப்படியாக நிலைமை சீரடைந்து, வருவாய் 598 பில்லியன் டாலராக உயரும்.

இவ்வாறு ஐஏடிஏ கூறி உள்ளது.
Tags:    

Similar News