செய்திகள்
இண்டிகோ விமானம்

இண்டிகோ, கோ ஏர் விமானங்களின் பழைய என்ஜின்களை மாற்ற மேலும் 3 மாதம் அவகாசம்

Published On 2020-06-01 05:23 GMT   |   Update On 2020-06-01 05:23 GMT
இண்டிகோ மற்றும் கோ ஏர் விமானங்களில் பழைய என்ஜின்களை மாற்றுவதற்கான அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்கள் தங்களது ஏ 320 நியோ விமானங்களில் உள்ள பழைய என்ஜின்களை மாற்றும்படி சிவில் விமான போக்குவரத்து இயக்குனநகரம் (டிஜிசிஏ) உத்தரவிட்டிருந்தது. விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள பிராட் அண்ட் விட்னி (பி.டபுள்யூ) என்ஜின்களில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால், அவற்றை அகற்றிவிட்டு புதிய சீரியஸ் என்ஜின்களை பொருத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முதலில் ஜனவரி 31ம் தேதிக்குள் மாற்றும்படி உத்தரவிடப்பட்ட நிலையில், அதன்பின்னர் மே மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பழைய என்ஜின்களை மாற்றுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதம் அவகாசம் அளித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

டிஜிசிஏ உத்தரவின்படி ஏற்கனவே பெரும்பாலான விமானங்களின் என்ஜின்கள் மாற்றப்பட்ட நிலையில், இன்னும் 60 என்ஜின்கள் மட்டுமே மாற்றவேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News