செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை - கோப்புப்படம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக அதிகரிப்பு

Published On 2020-05-31 12:23 GMT   |   Update On 2020-05-31 12:23 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளும் காலம் அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரட்டிப்பு ஆக எடுத்துக்கொள்ளும் காலம் கடந்த 3 நாட்களில் மேம்பட்டுள்ளது.



இந்தநிலையில்,  இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக இருப்பதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 4,614 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 86,983 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 89,995. ஆகும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவலின்படி,

மொத்தம் பாதிப்பு: 1,82,143 பேர்

மொத்தம் குணமடைந்தோர்: 86,984 பேர்

மொத்தம் பலியானோர்: 5,164 பேர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News