செய்திகள்
கொரோனா வைரஸ் பாதுகாப்பு

பொதுமக்கள் நாட்டின் எந்த இடத்திற்கும் செல்ல தடையில்லை - மத்திய அரசு

Published On 2020-05-30 15:33 GMT   |   Update On 2020-05-30 15:33 GMT
ஐந்தாம் கட்ட பொது ஊரடங்கை நீட்டித்த போதிலும் பொதுமக்கள் நாட்டின் எந்த இடத்திற்கும் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஐந்தாம் கட்ட பொது ஊரடங்கை நீட்டித்த போதிலும் பொதுமக்கள் நாட்டின் எந்த இடத்திற்கும் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு தழுவிய பொது ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஜூன் 30-ந்தேதி வரை பொது ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் நாட்டின் ஒரு இடத்தில் இருந்து எந்த இடத்திற்கும் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் சரக்குகளும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஆனால் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பொது சுகாதாரம் பாதிக்கப்படும் என்று நினைத்தால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நடைமுறைகளில் ‘‘மாநிலங்களுக்கு இடையில், மாநிலங்களுக்குள் பொதுமக்கள் மற்றும் சரக்குகள் செல்ல எந்த தடையும் இல்லை.



தனிப்பட்ட அனுமதி, இ-பெர்மிட் போன்றவைகள் தேவையில்லை. ஒரு மாநிலம், யூனியன் பிரதேசம், பொது சுகாதார காரணங்கள் மற்றும் நிலைமையை மதிப்பிடுவது ஆகியவற்றின் அடிப்படையில், நபர்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்த விரும்பினால், அத்தகைய இயக்கத்திற்கு விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து முன்கூட்டியே விளம்பர படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News