செய்திகள்
தியேட்டர்

தியேட்டர்கள், மெட்ரோ ரெயில்களுக்கு அனுமதி எப்போது?

Published On 2020-05-30 14:43 GMT   |   Update On 2020-05-30 14:43 GMT
தியேட்டர்கள் திறப்பது, மெட்ரோ ரெயில்கள் சேவைகள் குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய 4-வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30-ந்தேதி வரை ஐந்தாவது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள், மால்கள், ஓட்டல்கள் 8-ந்தேதியில் இருந்து திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர், மெட்ரோ ரெயில் சேவை போன்றவை குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



இதுகுறித்த விவரம் வருமாறு:-

1. பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து ஜூலை மாதம் தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படும்.

2. சர்வதேச விமான சேவைகளுக்கான தேதி சூழ்நிலையை பொறுத்து அறிவிக்கப்படும்

3. மெட்ரோ ரெயில் சேவையும் சூழ்நிலையை பொறுத்து அறிவிக்கப்படும்

4. சினிமா ஹால்ஸ், ஜிம்னாஸ்டிக், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள், ஆடிட்டோரியம் போன்றவைகளும் சூழ்நிலையை பொறுத்து அறிவிக்கப்படும்.

5. சமூகம், அரசியல், விளையாட்டு, அகாடமி, கலாச்சாரம், மதம் சார்ந்த விழாக்கள் போன்றவைகளுக்கும் சூழ்நிலை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News