செய்திகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்- மகாராஷ்டிராவில் 57 ஆயிரத்தை நெருங்கியது

Published On 2020-05-28 05:31 GMT   |   Update On 2020-05-28 05:31 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 57 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில், 17918 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் 1.58 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4531 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 67692 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 56948 ஆக உயர்ந்துள்ளது. 1897 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். 17918 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

தமிழகத்தில் 18545 பேருக்கும், குஜராத்தில் 15195 பேருக்கும், டெல்லியில் 15257 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் - 33
ஆந்திர பிரதேசம் - 3171
அருணாச்சல பிரதேசம் - 2
அசாம் - 781
பீகார் - 3061
சண்டிகர் - 279
சத்தீஸ்கர் - 369
தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 2
டெல்லி - 15257
கோவா - 68
குஜராத் - 15195
அரியானா - 1381
இமாச்சல பிரதேசம் - 273
ஜம்மு - காஷ்மீர்- 1921
ஜார்க்கண்ட் - 448
கர்நாடகா - 2418
கேரளா - 1004
லடாக் - 53
மத்திய பிரதேசம் - 7261
மகாராஷ்டிரா - 56948
மணிப்பூர் - 44
மேகாலயா - 20
மீசோரம் - 1
நாகலாந்து - 4
ஒடிசா - 1593
புதுச்சேரி - 46
பஞ்சாப் - 2139
ராஜஸ்தான் - 7703   
சிக்கிம் - 1
தமிழ்நாடு - 18545
தெலுங்கானா - 2098
திரிபுரா - 230
உத்தரகாண்ட் - 469
உத்தர பிரதேசம் - 6991
மேற்கு வங்காளம் - 4192

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உள்படுத்தப்பட்ட நோயாளிகள்-4332

மொத்தம் - 158333.
Tags:    

Similar News