செய்திகள்
திருப்பதி

திருப்பதியில் ஜூன் மாத முன்பதிவு தரிசன டிக்கெட்டுகள் ரத்து

Published On 2020-05-25 11:11 GMT   |   Update On 2020-05-25 11:11 GMT
திருப்பதியில் ஜூன் 30-ந் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்த தரிசனம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து பணத்தை திருப்பி அளிப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி:

ஊரடங்கையொட்டி திருப்பதி கோவிலில் மார்ச் 20-ந் தேதி முதல் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏழுமலையானுக்கு நடைபெறக்கூடிய பூஜைகள் எவ்வித தொய்வுமின்றி நடந்து வருகிறது.

ஊரடங்கு தளர்வுக்கு வந்து தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கலாம் என்று அரசு அறிவித்தால் பக்தர்களை எவ்வாறு தரிசனத்துக்கு அனுப்புவது என்பதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்பதிவு தரிசன டிக்கெட்டுகளை ஜூன் 30-ந் தேதி வரை ரத்து செய்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளதால் திருப்பதி கோவிலில் மே 31-ந் தேதி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 13-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்திருந்த ஆர்ஜித சேவைகள், விரைவு தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை பக்தர்களின் வங்கிக் கணக்குகளுக்கு திருப்பதி தேவஸ்தானம் திருப்பி செலுத்தியது.

இந்த நிலையில் ஜூன் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தேவஸ்தானம் பக்தர்கள் முன்பதிவு செய்த சேவா டிக்கெட், வாடகை அறை, விரைவு தரிசனம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து பணத்தை பக்தர்களுக்கு திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளது.

ஜூன் மாதம் ஊரடங்கு விலக்கப்பட்டால் சமூக இடைவெளியுடன் தினமும் குறைந்த அளவிலான பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
Tags:    

Similar News