செய்திகள்
உலக சுகாதார அமைப்பு

இவர்களை மட்டும் கொரோனா தாக்காது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது?

Published On 2020-05-14 04:34 GMT   |   Update On 2020-05-14 04:34 GMT
சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் உலக சுகாதார அமைப்பு இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.



உலகில் இதுவரை சைவ உணவு பழக்கம் கொண்ட ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. ஏனெனில், கொரோனா வைரஸ் மனித உடலில் உள்ள அசைவ கொழுப்புக்களை கொண்டே இயங்குகிறது எனும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றிய ஆய்வில், சைவ உணவு உட்கொள்வோர் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்க முடியும் என்பது நிரூபிக்கப்படவில்லை. மேலும் உலக சுகாதார மையம், கொரோனா பாதிப்பு சைவ உணவு உட்கொள்வோருக்கு ஏற்படாது அல்லது கொரோனா வைரஸ் மனித உடலில் உள்ள அசைவ கொழுப்புக்களை கொண்டே இயங்குகிறது எனவும் தெரிவிக்கவில்லை.



கொரோனா பாதிப்பு காலக்கட்டத்தில் அசைவ உணவுகளில் உள்ள புரத சத்து உட்கொள்வது நன்மை பயக்கும் என்றே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை. அதில் உள்ளது போன்ற தகவலை வழங்கவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று சைவ உணவு உட்கொள்வோரை கொரோனா தாக்காது என உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News