செய்திகள்
நீட் தேர்வு

ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு

Published On 2020-05-05 07:29 GMT   |   Update On 2020-05-05 07:36 GMT
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்‘ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

அந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில், ‘நீட்‘ நுழைவுத் தேர்வு ஜூலை 26-ந்தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். 

மேலும் ஜூலை 18,20,21,22,23 ஆகிய தேதிகளில் JEE Main தேர்வும், JEE ADVANCED தேர்வு ஆகஸ்ட் மாதமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News