இந்தியா

மருத்துவமனைக்குள் 'ஸ்கூட்டி' ஓட்டி சென்ற நர்ஸ்

Published On 2024-05-11 09:10 IST   |   Update On 2024-05-11 12:25:00 IST
  • மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளது.
  • மருத்துவமனையின் நடைபாதையில் நோயாளிகள் அமர்ந்திருக்க சில நோயாளிகள் அங்கும், இங்குமாக சென்று வரும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் ஸ்கூட்டி ஓட்டி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள பிலிபித் மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. மருத்துவமனையின் நடைபாதையில் நோயாளிகள் அமர்ந்திருக்க சில நோயாளிகள் அங்கும், இங்குமாக சென்று வரும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன.

இதற்கிடையே அந்த நர்ஸ் தனது ஸ்கூட்டியில் மருத்துவமனையை சுற்றி ஓட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நர்சின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News